ஆஸ்கர் விருது – நாமினேஷன் பட்டியல் இன்று மாலை அறிவிப்பு
உலக அளவில் வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் முதன்மை விருதாகக் கருதப்படுவது அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருது. இந்த வருடத்திற்கான 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது.
விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள படங்கள், நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரது கடைசி கட்ட நாமினேஷன் பட்டியல் இன்று மாலை 6.30 மணிக்கு ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர், பேஸ்புக், யு டியூப் தளங்கள் மூலம் அறிவிக்கப்பட உள்ளது.
சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான போட்டியில் இந்தியாவின் சார்பாக 'கூழாங்கல்' படம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இறுதிப்பட்டியலில் அந்தப் படம் இடம் பெறவில்லை.
இருப்பினும் “ஜெய் பீம்', படம் போட்டிக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே, ஆஸ்கர் விருது விழாவின் தொகுப்பாளரான ஜாக்குலின் கோலே டுவிட்டரில் “சிறந்த வெளிநாட்டுப் பட விருதுக்கு 'ஜெய் பீம்' படம் நாமினேட் ஆக வாய்ப்புள்ளது, நம்புங்கள்,” என டுவீட் போட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் ரசிகர்கள் இதை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். இன்னும் சில மணி நேரங்களில் இதற்கான விடை தெரிந்துவிடும்.