சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் வகை மதுவை விற்பனை செய்ய அனுமதி அளித்து புதிய சட்டத்தை
மகாராஷ்டிர மாநில அரசு
அண்மையில் கொண்டு வந்தது. இதன்படி 1,,000 சதுர அடிக்கும் மேல் பரப்பளவு கொண்ட சூப்பர் மார்க்கெட்களில் ஒயின் விற்பனை செய்யலாம்.
இதற்கு ஆண்டுக்கு 5,000 ரூபாய் உரிம கட்டணம் செலுத்த வேண்டும் என்று சிவசேனா அரசு தெரிவித்துள்ளது. மாநில அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், சூப்பர் மார்க்கெட்டில் ஒயின் விற்கு அனுமதி அளித்துள்ள மகாராஷ்டிர மாநில அரசின் முடிவுக்கு சமூக ஆர்வலர்
அன்னா ஹசாரே
கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மாநில அரசின் இந்து முடிவுக்கு எதிராக பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்க உள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காதலர் தினத்தில் தரமான சம்பவம்… திருநங்கைகள் முடிவு!
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அன்னா ஹசாரே முன்னெடுத்த ஊழலுக்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.
சில, பல ஆண்டுகளாக போராட்டங்களை கையில் எடுக்காமல் இருந்த அன்னா ஹசாரே, நீண்ட இடைவெளிக்கு பிறகு மகாராஷ்டிர மாநில அரசுக்கு எதிராக காதலர் தினத்தில் போராட்டத்தில் இறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.