உக்ரைன் நாட்டில் பனிப் பாளத்தில் சிக்கித் தவித்த நாயை இளைஞர் ஒருவர் தனது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றினார்.
டொனெட்ஸ்கில் என்ற இடத்தில் உறைபனி காரணமாக அங்கிருந்த நீர் நிலைகள் அனைத்தும் பனியாக மாறிப் போயின. இதில் மைனஸ் 7 டிகிரி என்ற வெப்பநிலையில் கல்மியஸ் ஏரியும் உறைந்து போனது.
இந்த ஏரி வழியாக வந்த இரு நாய்களில் ஒன்று பனிப் பாளத்தின் நடுவே சிக்கி உயிருக்குப் போராடியது. இதனைக் கண்ட இளைஞர் ஒருவர் தனது ஆடைகளைக் களைந்து விட்டு பனியை உடைத்துச் சென்று உயிருக்குப் போராடிய நாயை மீட்டு கரை சேர்த்தார். தனது உயிரைப் பொருட்படுத்தாமல் சேவை செய்த இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர்.