'உங்களுக்கு அந்த உரிமை கிடையாது' கனேடிய பிரதமர் போட்ட ட்வீட்!



கனடாவில் அரசாங்கத்தின் கோவிட்-19 ஆணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை நிறுத்துவது குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கனடாவில் தலைநகர் ஒட்டாவாவில், கோவிட்-19 தடுப்பூசி ஆணைக்கு எதிராக கனடாவில் உள்ள டிரக் ஓட்டுனர்களும், தடுப்பூசி எதிர்ப்பாளர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கனேடிய நாடாளுமனர் அவலகத்தைச் சுற்றி வாகனங்களின் ஹாரன்களை நீண்ட நேரத்திற்கு ஒலிரச் செய்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈட்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கனேடிய அரசாங்கம் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

இதனிடையே, நேற்று, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஒட்டாவாவில் கோவிட்-19 தடுப்பூசி ஆணைக்கு எதிராக டிரக்கர்களின் போராட்டங்கள் “நிறுத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.

பொருளாதாரம் மற்றும் உள்ளூர்வாசிகள் மீதான ஆர்ப்பாட்டங்களின் தாக்கத்தை மேற்கோள் காட்டி. ட்ரூடோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், அரசாங்கத்துடன் கருத்து வேறுபாடு கொள்ள மக்களுக்கு உரிமை உண்டு, ஆனால் “பொருளாதாரத்தை அல்லது நமது ஜனநாயகத்தை முற்றுகையிடும் உரிமை” இல்லை என்று வலியுறுத்தினார்.

மேலும், இந்த ஆர்ப்பாட்டம் விரைவில் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறிய அவர், தொடர் டீவீட்டில் “இதுவரை, நூற்றுக்கணக்கான RCMP அதிகாரிகள் ஒட்டாவா பொலிஸ் சேவைகளுக்கு ஆதரவாக அணிதிரட்டப்பட்டுள்ளனர்.

எங்களின் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்த முனிசிபல் கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுகிறோம், மேலும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தேவையான அனைத்து ஆதாரங்களுடனும் நாங்கள் தொடர்ந்து இருப்போம்” என்று கூறினார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.