இந்திய வர்த்தக உலகில் எலக்ட்ரிக் வாகனம், கிரீன் எனர்ஜிக்கு அடுத்தபடியாக ஹாட் டாப்பிக்காக இருக்கும் ஒன்று ஏர் இந்தியா. டாடா ஒவ்வொரு செங்கல் ஆகக் கட்டி உருவாக்கிய ஏர் இந்தியா-வை மத்திய அரசிடம் இருந்து 69 வருடத்திற்குப் பின்பு திரும்ப பெற்றுள்ளது டாடா குழுமம்.
இந்தியாவில் தாராளமயமாக்கல்-க்கு முன்பும் நாட்டிலேயே மிகப்பெரிய பிராண்ட் வேல்யூவை கொண்ட நிறுவனமாக ஏர் இந்தியா விளங்கிய நிலையில், இந்த ஏர் இந்தியா என்னும் பெயரை வைத்தது யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் டாடா குரூப் இதற்கு நேரடியாகத் தனது வரலாற்று ஆவணங்கள் உடன் விளக்கம் கொடுத்துள்ளது.
சந்திரசேகரன்
சந்திரசேகரன் தலைமையிலான டாடா குழுமத்திடம் ஏற்கனவே ஏர் ஏசியா, விஸ்தாரா என இரு விமானச் சேவை நிறுவனங்கள் இருந்தாலும், ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது அதிகப்படியான கவனம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனாலேயே ஏர் இந்தியா கைப்பற்றிய அடுத்த நிமிடத்தில் இருந்து பல்வேறு மாற்றங்களையும் மேம்பாடுகளையும் டாடா குழுமம் செய்து வருகிறது.
ஏர் இந்தியா
ஏர் இந்தியாவை மீண்டும் ஸ்டார் நிறுவனமாக உருவாக்க வேண்டும் என்பதில் டாடா தீவிரமாக இருக்கும் நிலையில் இந்தப் பணிகளைப் பெருமையுடனும் செய்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் டாடா குழுமத்திற்கும் – ஏர் இந்தியாவுக்கும் இருக்கும் உறவு தான்.
சுதந்திர இந்தியா
75 ஆண்டுகளுக்கு முன்பு 1946ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு டாடா குழுமம் தனது தபால் டெலிவரி செய்யும் டாடா ஏர்லையன்ஸ் நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என ஜேஆர்டி டாடா தலைமையிலான டாடா குழும நிர்வாகக் குழு முடிவு செய்தது.
என்ன பெயர்
இந்நிலையில் 1946ஆம் ஆண்டில் டாடா நிர்வாகம் புதிய விமான நிறுவனத்திற்கு அதாவது சுதந்திர இந்தியாவின் முதல் விமான நிறுவனத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் எனப் புல்லட்டின் வெளியிட்டது. இந்தப் புல்லட்டினில் 4 பெயர்களைக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
4 பெயர்கள்
இந்தியன் ஏர்லையன்ஸ், பேன் இந்தியன் ஏர்லையன்ஸ், டிரான்ஸ் இந்தியன் ஏர்லையன்ஸ், ஏர் இந்தியா ஆகிய பெயர்களைப் புல்லட்டினில் குறிப்படப்பட்டு இருந்தது. டாடா குழுமம் ஊழியர்களுக்கு அதிகப்படியான உரிமையும் சுதந்திரத்தையும் அளிக்கும் நிலையில் ஊழியர்கள் மத்தியில் வாக்கெடுப்பு செய்யப்பட்டு முடிவு செய்யப்ட்டது.
ஏர் இந்தியா தேர்வு
முதல் சுற்று வாக்கெடுப்பில் பேன் இந்தியன் ஏர்லையன்ஸ் 19 வாக்குகளையும், டிரான்ஸ் இந்தியன் ஏர்லையன்ஸ் 28 வாக்குகளைப் பெற்று கடைசி இரண்டு இடத்தைப் பெற்ற போட்டியில் இருந்து வெளியேறியது. 2வது கட்ட போட்டியில் ஏர் இந்தியா 72 வாக்குகளையும், இந்தியன் ஏர்லயன்ஸ் 58 வாக்குகளைப் பெற்ற நிலையில் ஏர் இந்தியா பெயர் வைக்கப்பட்டு உள்ளது.
ஜேஜே பாபா
இந்த வாக்கெடுப்பு விபரம் செய்யப்பட்ட முறையும், தேர்வு செய்யப்பட்ட விபரங்களை டாடா சென்டரல் ஆர்சிவ்ஸ்-ன் நிறுவனரான டாக்டர் ஜேஜே பாபா தனது கைப்பட டைப் செய்து உள்ளார்.
7 வருடம்
ஏர் இந்தியா எனப் பெயர் வைத்த பின்பு பல நகரங்களுக்குச் சேவைகளை விரிவாக்கம் செய்த நிலையில் வெறும் 7 வருடத்தில் ஏர் இந்தியாவை இந்திய அரசு கைப்பற்றியது தான் சோகமான விஷயம்.
Do You know who named Air India in 1946.. Intresting fact from Tata Central Archives
Do You know who named Air India in 1946.. Intresting fact from Tata Central Archives ஏர் இந்தியாவுக்கு பெயர் வைத்து யார் தெரியுமா..?!