ஒமைக்ரான் மாறுபாடு கண்டறியப்பட்டது முதல் இதுவரை 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
கடந்த நவம்பர் மாத இறுதியில் ஒமைக்ரான் வேறுபாடு குறித்து அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை 13 கோடி பேருக்கு தொற்று உறுதி செய்யபட்டதாக தெரிவிக்கப்பட்டுளது.
டெல்டா மாறுபாடை விட ஒமைக்ரான் வீரியம் குறைந்து காணப்படுவதாகவும், ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் திறன் தடுப்பூசிக்கு இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் 5 லட்சம் பேர் உயிரிழந்து இருப்பது சோகத்திற்கு அப்பாற்பட்டது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் ஒமைக்ரான் பரவலின் நடுப்பகுதியில் இருப்பதாகவும் இறுதி கட்டத்தை நெருங்க அதிக பாதிப்புகள் ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.