திரவத் தங்கம் என்றழைக்கப்படும் கச்சா எண்ணெய் விலையானது கடந்த சில தினங்களாகவே சரிவினைக் கண்டு வருகின்றது. இதற்கு பல்வேறு காரணிகளும் சாதகமாக உள்ளன.
குறிப்பாக அமெரிக்காவின் எண்ணெய் இருப்பு குறித்தான தரவானது எண்ணெய் விலைக்கு சாதகமாக வரலாம் என்றும் கூறப்பட்டது.
எதிர்பார்ப்பினை போல கச்சா எண்ணெய் இருப்பு குறித்தான தரவும் சந்தைக்கு சாதகமாக வந்துள்ளது. இந்த நிலையில் தான் கச்சா எண்ணெய் விலையும் ஆரம்பத்தில் ஏற்றத்தினை கண்டிருந்தாலும், தற்போது சரிவினைக் கண்டு வருகின்றது.
91 டாலரை தாண்டிய கச்சா எண்ணெய்.. மோடிக்கு புதிய சவால்..!
WTI கச்சா எண்ணெய் விலை
WTI கச்சா எண்ணெய் விலையானது, இருப்பு குறித்தான 0தரவானது வெளியாகியுள்ள நிலையில், சற்று குறைந்து பேரலுக்கு 89.19 டாலராக காணப்படுகின்றது. மேலும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக கச்சா எண்ணெய் விலையானது மேலும் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
பிரெண்ட் கச்சா எண்ணெய்
சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது சற்று ஏற்றத்தினையே கண்டு காணப்படுகின்றது. பிடத்தக்கது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும் கீழாக தொடங்கியிருந்தாலும், குறைந்த பட்சம், அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. எனினும் மீடியம் டெர்மில் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
உக்ரைன் பிரச்சனை
கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான பிரச்சனை தொடர்ந்து வருகின்றது. எனினும் ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே பெரிய பிரச்சனை இருக்காது என ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின், பிரெஞ்ச் அதிபரிடம் கூறியுள்ளார். ஆக இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும் கூறியிள்ளார்.
அமெரிக்கா – ஈரான் பேச்சு வார்த்தை
எத்தனையோ முறைகள் ஈரானும் அமெரிக்காவும் பேச்சு வார்த்தை நடத்த முற்பட்டன. ஆனால் அவை எதுவும் கைகொடுத்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் தற்போது அமெரிக்கா ஈரான் கூட பேச்சு வார்த்தை ஈடுப்பட்டுள்ளது. இதற்கிடையில் மீண்டும் அணுசக்தி ஒப்பந்தத்தில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் எண்ணெய் சப்ளையை அதிகரிக்க காரணமாக அமையலாம்.
ஓபெக் நாடுகளின் திட்டம்
ஓபெக் நாடுகள் வரும் மார்ச் மாதத்தில் + 4 லட்சம் bpd -களைஉற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளன. எனினும் 4 லட்சம் பேரல்களுக்கு மேல் அனுமதி கொடுக்கவில்லை என்பதே சாதகமான விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. இது ஜனவரி மாதத்தில் 50,000 பேரல்கள் உற்பத்தியினை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
ஓமிக்ரான் அச்சம்
சர்வதேச அளவில் பரவி வரும் ஒமிக்ரானுக்கு மத்தியில் பல நாடுகளும் சிக்கித் தவித்து வருகின்றன. இதன் காரணமாக கச்சா எண்ணெய் தேவையானது குறையலாம் எனும் விதமாக காணப்படுகின்றது. ஏனெனில் ஏற்கனவே சில இடங்களில் கட்டுபாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இது இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய சப்போர்ட் லெவல்
கச்சா எண்ணெய்-ன் முக்கிய சப்போர்ட் லெவலானது 86.89 – 85.25 டாலராகவும், ரெசிஸ்டன்ஸ் லெவலாக 94.88 – 97.4 டாலராகவும் இருக்கலாம் என அபான்ஸ் குழுமத்தின் EVP & கேப்பிட்டல் & கமாடிட்டியின் தலைவர் மகேஷ் குமார் கூறியுள்ளார்.
crude oil prices slips from high amid strong data
crude oil prices slips from high amid strong data/கச்சா எண்ணெய் விலை இனி எப்படியிருக்கும்.. புட்டு புட்டு வைத்த நிபுணர்கள்..!