புதுடெல்லி,
பிரதமர் மோடி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-
வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நாங்கள் நம்புகிறோம். ஆனால், சில தலைவர்கள் பிரித்தாளும் கொள்கையை பின்பற்றுகின்றனர். நாடு முழுவதும் 100 முன் மாதிரி மாவட்டங்களை கண்டுபிடித்துள்ளோம். இன்று சில மாவட்டங்கள் பல்வேறு அளவீடுகளில் தேசிய சராசரியை கடந்துள்ளது.
ஒரு கட்சி தலைமறை தலைமுறையாக ஒரே குடும்பத்தால் நடத்தப்படும்போது குடும்ப அரசியலில் தான் இருக்குமே தவிர மாற்றமிருக்காது. இரு கட்சிகள் இரு குடும்பத்தால் நடத்தப்படும் ஜம்மு-காஷ்மீர் தொடங்கி அரியானா, ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம், தமிழ்நாடு வரை இதே நிலை இருந்துள்ளது. குடும்ப அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி’ என்றார்.