ஒமைக்ரானுக்கு அடுத்ததாக வரும் கொரோனா திரிபுகள் தீவிரமாக தொற்றும் தன்மை கொண்டதாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் முதன் முதலில் பரவிய கோவிட் – 19 எனப்படும்
கொரோனா
வைரஸ் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டாலும், அந்த வைரஸ் தொற்று, பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து பரவி வருவது, சுகாதாரத் துறையினரை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப ஆய்வுப் பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறியதாவது:
இன்னும் சில காலத்திற்கு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை உலக மக்கள் தொடர வேண்டியிருக்கும். கொரோனா திரிபுகளில் ஒமைக்ரான் கடைசியாக இருக்காது. மேலும் சில திரிபுகள் மக்களைத் தாக்க வாய்ப்பு உள்ளது.
மீண்டும் முழு ஊரடங்கு.. மறு உத்தரவு வரும் வரை – அரசு அதிரடி!
கொரோனாவின் அடுத்த திரிபு, ஒமைக்ரானை விட தீவிரமாக தொற்றும் தன்மை கொண்டதாக இருக்கும். அதற்குப் பிறகும் சில திரிபுகள் ஏற்படக்கூடும். அடுத்தடுத்த திரிபுகளுக்கு எதிராக தடுப்பூசிகளின் எதிர்ப்புத்திறன் குறையக்கூடும். எனினும், நோய்த் தொற்று ஆபத்தையும் உயிரிழப்பையும் தடுப்பூசி பெருமளவு தடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.