புதுடெல்லி: சமத்துவச் சிலை சீனாவில் உருவாக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசின் ஆத்ம நிர்பார் கொள்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், ஹைதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில், சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக கோயில் அமைக்கப்பட்டுள்ளது. பத்ம பீடத்தின் மீது 216 அடி உயரத்தில் ராமானுஜருக்கு பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்தநிலையில், ராமானுஜர் சிலை சீனாவில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
Statue of Equality is Made in China.
‘New India’ is China-nirbhar?
— Rahul Gandhi (@RahulGandhi) February 9, 2022
‘புதிய இந்தியா சீனா – நிர்பார்’. சமத்துவத்தின் சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டது. ‘புதிய இந்தியா’ என்பது சீனா-நிர்பார்” என்று அவர் இன்று பதிவிட்டுள்ளார்.