ஜேர்மனியில் டிரக் சாராராதி ஒருவர் குடிபோதையில் வாகனம் ஒட்டி 31 கார்களை இடித்து நாசமாக்கியுள்ளார்.
இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
பிப்ரவரி 8-ஆம் திகதி தெற்கு ஜேர்மனியின் Fuerth பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகளின் கூற்றுப்படி, போதையில் இருந்த டிரக் டிரைவர் சிவப்பு விளக்கைப் புறக்கணித்து வேகமாக சென்றுள்ளார்.
பின்னர், பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட கார்கள் மீது தனது வாகனத்தை மோதி, கட்டிடங்களுக்கு எதிராக கார்களைத் தள்ளி பெரும்விபத்தை ஏற்படுத்தினார்.
அதில் 31 கார்கள் சேதமடைந்தன.
கட்டிடங்கள் சேதமடைந்து, அவற்றில் சில கார்கள் தீப்பிடித்து எரிந்தன. அங்கிருந்த ஒரு சில வீடுகளில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
Picture: AFP)
இதனைத் தொடர்ந்து, ஜேர்மனியில் நிரந்தர குடியிருப்பு இல்லாத 50 வயதான துருக்கிய குடிமகனான அந்த டிரக் டிரைவர், சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆல்கஹால் குழாய் கருவியின் மூலம் சோதனை செய்யப்பட்டதில் அவர் பயங்கரமாக குடிகித்திருந்தது தெரியவந்தது.
மேலும், விபத்து நடந்த இடத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை, ஆனால் அதற்கு முன்னதாக சாலையில் சிகப்பு விளக்கை மீறி வந்தபோது குறுக்கே வந்த ஒரு கார் மீது மோதியதால், அந்த காரில் இருந்த இருவர் மற்றும் வழிப்போக்கர் ஒருவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.Picture: AP