நடிகர்
விஜய்
ஆரம்பகாலகட்டத்தில் எவ்வளவு விமர்சனங்களை சந்தித்தாரா அந்த அளவிற்கு தற்போது புகழை சந்தித்து வருகிறார். தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை வெற்றி படிக்கட்டுகளாக மாற்றி தன் அயராத உழைப்பால் இன்று வசூல் சக்ரவர்த்தியாக உருவெடுத்துள்ளார்.
தன் ஒவ்வொரு படங்களிலும் வசூலில் உச்சத்தை தொடும் விஜய் கடந்த கொரோனா சூழலிலும், திரையரங்கிற்க்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட சூழலிலும்
மாஸ்டர்
படத்தை வெளியிட்டார். 50 % இருக்கைக்கே திரையரங்கில் அனுமதி அளிக்கப்பட்டபோதும் மாஸ்டர் படம் வசூலில் அடித்து நொறுக்கியது.
இது ஒன்றே விஜய் எந்த உயரத்தில் தற்போது இருக்கிறார் எனபதற்கு சான்று. இந்நிலையில் இவர் அடுத்ததாக
நெல்சன்
இயக்கத்தில்
பீஸ்ட்
படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இதனையொட்டி படத்திலிருந்து ஒரு பாடல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
லதா மங்கேஷ்கரின் சொல்ல மறந்த காதல் கதை..!அவர் யாரை காதலித்தார் தெரியுமா ?
ஹலமதி என துவங்கும் அப்பாடலின் ப்ரோமோ சில நாட்களுக்கு முன் வெளியானது. மிகவும் வித்யாசமாக வெளியான அந்த ப்ரோமோ ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்நிலையில் ஹலமதி என துவங்கும் அந்த அரபிக் வார்த்தை கொண்ட பாடல் தற்போது செம வைரலாகி வருகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரு பக்கம் ஹிஜாப் விவகாரம் போய்க்கொண்டிருக்கையில், அதே நேரத்தில் இந்த ஹலமதி பாடலும் தீயாய் பரவிவருகிறது.
ஹிஜாப் பிரச்சனை ஒருபுறம் இருக்கையில், அதே டைமிங்கில் இப்பாடலும் வெளியாவது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் தான் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பிரச்சனை தலைதூக்கும் போது மாஸ்டர் படத்திலிருந்து குட்டி ஸ்டோரி பாடல் வெளியானது. அந்த பாடலின் லிரிகள் வீடியோவில் கொரோனா என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது.
அப்போது கொரோனா இந்தியாவில் வராத நேரத்தில் அந்த பாடல் வெளியானது. அதன் பின் ரசிகர்கள் அந்த பாடலின் வீடியோவில் இடம்பெற்ற கொரோனா வார்த்தையை ட்ரெண்டாக்கினர். அதேபோல் இந்த அரபிக் குத்து பாடலிலும் எதாவது ஒளிந்திருக்குமா என்று எதிரிபார்க்கின்றனர் ரசிகர்கள்.
இதேபோல் நாட்டில் நடக்கும் பிரச்னைக்கு ஏற்றவாறு பலமுறை விஜய்யின் படங்களோ, பாடல்களோ வெளியாகியுள்ளது. எனவே இதுதான் விஜய்யின் வெற்றி ரகசியம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உயர்த்தி பேசுங்கள் , தாழ்த்தி பேச வேண்டாம் – சந்தானம் பேச்சு!