குண்டாறு, வைகை நதிகளை இணைக்கும் தமிழகத்தின் திட்டத்துக்கு நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
Also Read: மேக்கேதாட்டூ அணைக்கு விரைவில் அனுமதி? மத்திய அமைச்சரின் சூசக பதிலால் கொதிக்கும் தமிழக விவசாயிகள்!
மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப் பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்திய பின்னர், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “நிலம் மற்றும் நீர் தொடர்பான மாநில நலன்களை பாதுகாப்பதில் கர்நாடகா எப்போதும் ஒன்றுபட்டிருக்கும். எங்கள் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதன் மூலம் எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக முன்வைப்போம்” என்றார்.
கிருஷ்ணா தீர்ப்பாயத்தின் தீர்ப்பை குறித்து பேசுகையில், “கடந்த விசாரணைக்கு முன்பே நீதிபதி பதவி விலகியதால், புதிய நீதிபதியை அடுத்த விசாரணைக்கு முன்பே நியமிக்கக் கோரி மனு அளித்துள்ளோம். இது குறித்து தலைமை நீதிபதி முடிவெடுப்பார். இதற்கான முடிவுகள் எடுக்கப்படாத பட்சத்தில் இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம்” என்றார்.
Also Read: காவிரி-வைகை-குண்டாறு திட்டம்…
மாற்றுவழியில் ரூ.4,000 கோடி மிச்சம்!
மேலும், கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, பெண்ணாறு இணைப்புத் திட்டங்கள் குறித்தும் விவாதித்ததாகவும், எங்களுடைய நிலைப்பாட்டை நாங்கள் தாக்கல் செய்யும் வரை, கர்நாடகாவிற்கான பங்கு உட்பட ஒவ்வொரு மாநிலத்தின் நீர் பங்கீடும் முடிவு செய்யப்படும் வரை, டிபிஆ ருக்கு ஒப்புதல் வழங்கக்கூடாது .
கர்நாடகாவின் நிலைப்பாடு குறித்து மத்திய நிதி அமைச்சருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன் அனைத்து மாநிலங்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும் பொம்மை கூறினார்.