பாலக்காடு: கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் பாறை இடுக்கில் சிக்கி தவித்து வந்த நிலையில், அவரை ராணுவ உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மலம்புழா மலையில் ஏறிய பாபு என்ற 23 வயது இளைஞர் தனது மூன்று நண்பர்களுடன் குரும்பாச்சி மலைக்கு சென்றுள்ளார். மலையேற்றத்தின் போது நடுவழியில் கால் தவறியதில் பாபு உருண்டு விழுந்து, அதிர்ஷ்டவசமாக பாறை இடுக்கில் இருந்த சிறிய குகையில் சிக்கி கொண்டார். இதில் அவரது கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டது. அவரை மீட்க தீயணைப்பு வீரர்கள் முயற்சி செய்தனர்.
ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணியும் தோல்வியில் முடிவடைந்ததால், கேரள முதல்வர் பினராயி விஜயன் ராணுவ உதவியை நாடினார். இதனையடுத்து, வெலிங்டன், பெங்களூருவில் இருந்து வந்துள்ள மலையேற்ற பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள், சுமார் 3 நாட்களாக மலை இடுக்கில் சிக்கியிருக்கும் பாபுவை, பத்திரமாக மீட்டனர்.
பாலக்காடு: கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் பாறை இடுக்கில் சிக்கி தவித்து வந்த நிலையில், அவரை ராணுவ உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.கேரள மாநிலம் பாலக்காடு மலம்புழா மலையில் ஏறிய பாபு என்ற 23
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.