புதுடில்லி: கடந்த ஜனவரி மாதம் வரை பாஸ்டேக் மூலமாக ரூ.26,622.93 கோடி வசூலாகியுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் அளித்துள்ளார்.
சுங்கச் சாவடிகளில், வாகனங்களுக்காக சுங்கக் கட்டணத்தை மின்னணு முறையில் செலுத்தும் பாஸ்ட்டேக் வசதி நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது. வங்கிகள் மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்கள் வாயிலாக, ‘பாஸ்டேக்’ எனப்படும், மின்னணு அட்டைகள் வழங்கப்படுகின்றன. பாஸ்ட்டேக் மூலம் பெறப்படும் வருவாய் தொடர்பாக ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
அதில், ‛கடந்த ஜனவரி 31, 2022 வரை 4.59 கோடி பாஸ்டேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் பாஸ்டேக் மூலம் பெறப்பட்ட கட்டணம் 2020ம் நிதியாண்டில் 10,728.52 கோடி ரூபாய் வசூலானது. கடந்த ஜனவரி மாதம் வரை ரூ.26,622.93 கோடி வசூலாகியுள்ளது,’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
புதுடில்லி: கடந்த ஜனவரி மாதம் வரை பாஸ்டேக் மூலமாக ரூ.26,622.93 கோடி வசூலாகியுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் அளித்துள்ளார்.சுங்கச் சாவடிகளில், வாகனங்களுக்காக சுங்கக் கட்டணத்தை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.