ஆவடி: தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்ட ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் 396 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்பாளர்கள் பட்டியில் வெளியிடப்பட்டு தேர்தல் பணிகளும் சுறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சியினரும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், புதிதாக தொடங்கப்பட்ட ஆவடி மாநகராட்சியில் இடம்பெற்றுள்ள 48 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, 48 வார்டுகளில் அரசியல் கட்சிகள், சுயேட்சைகள் உள்பட 396 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
திமுக சார்பில் 38 பேரும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் 3 பேரும், மதிமுக சார்பில் 3 பேரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 2 பேரும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் 2 பேரும் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் 46 பேரும், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புரட்சி பாரதம் கட்சி சார்பில் இருவரும் போட்டியிடுகின்றனர். மேலும், அமுமுக, தேமுதிக, பாமக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், சுயேச்சைகள் உள்ளிட்டோரும் போட்டியிடுகின்றனர்.