மறைந்த பாடகி லதா மங்கேஷ்கருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். அதன் காரணமாகத்தான் அவரின் பிரிவு அனைவரிடமும் இந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 92 வயதான லதா கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கும் லதா பல மொழிகளில் 30 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார்.
இவருக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் கடல் தாண்டியும் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பிரபல பாகிஸ்தான்
கிரிக்கெட்
வீரரான
ஷோயிப் அக்தர்
லதா மங்கேஷ்கரின் தீவிர ரசிகராவார். அவரை காண வேண்டும் என நீண்டநாளாக நினைத்து கொண்டிருந்த ஷோயிப் அக்தரால் கடைசிவரை லதாவை நேரடியாக பார்க்கமுடியவில்லையாம்.
இதனை மிகவும் வருத்தத்துடன் தனது யூடுப் சானலில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, ” தான் ஒரு வேலை விஷயமாக இந்திய வந்திருந்தபோது லதா மங்கேஷ்கருடன் போனில் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது, அப்போது நான் லதா ஜி என்று அவரை அழைத்தேன். அதற்கு என்னை ஜி என்று அழைக்காதீர்கள் அம்மா என்றே அழையுங்கள் என கூறியது என்னால் கடைசிவரை மறக்கவே முடியாது” , என்றார்.
டைமிங்கில் தட்டி தூக்கும் தளபதி.இதுதான் விஜய்யின் வெற்றி ரகசியமோ ?
மேலும் ஷோயிப் அக்தருடன் பேசிய லதா நான் உங்கள் போட்டியை பலமுறை பார்த்திருக்கிறேன். உங்களுக்கும், சச்சினுக்கும் களத்தில் நடக்கும் போட்டி மிக தீவிரமாகவும், ஆக்ரோஷமாகவும் இருக்கும். அதே சமயத்தில் களத்தை விட்டு வெளியே வந்தால் நீங்கள் மிகவும் சாந்தமாக மாறிவிடுவீர்கள்.
உங்களின் அந்த குணம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என லதா ஷோயிப் அக்தரிடம் சொன்னாராம். இவ்வாறு ஒரு பாகிஸ்தான் வீரர் லதா மங்கேஷ்கரின் தீவிர ரசிகராக இருப்பது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sila Nerangalil Sila Manithargal – கவித்துவமான Commercial படம்