நியூயார்க்:பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிராவின் மும்பையில் வசித்து வந்த, இந்திய பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர், 92, கடந்த 6ம் தேதி காலமானார். திரை இசைத் துறையில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை அவர் பாடி உள்ளார்.அவருடைய மறைவுக்கு ஐ.நா., சபைபொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:இந்திய துணை கண்டத்தின் குரலாக அறியப்படும் லதா மங்கேஷ்கரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும், இந்திய மக்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கல்லுாரிக்கு லதா பெயர்
மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில், இசைக் கல்லுாரி ஒன்றை கட்டமைக்கவும், அதற்கு லதா மங்கேஷ்கரின் பெயரை சூட்டவும், மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அதன்படி, அந்த இசைக் கல்லுாரிக்கு, ‘பாரத ரத்னா லதா தீனநாத் மங்கேஷ்கர்’ என பெயர் சூட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்:பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிராவின் மும்பையில் வசித்து வந்த, இந்திய பழம்பெரும்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.