கனடாவில் லாரி ஓட்டுநர்களுக்குத் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை கண்டித்து, கனரக லாரிகளை சாலைகளின் குறுக்கே நிறுத்தி அவர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளதால், கனடாவை அமெரிக்கா உடன் இணைக்கும் முக்கிய சாலை மூடப்பட்டுள்ளது.
கனடாவில் இருந்து 75 சதவீத ஏற்றுமதிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் நிலையில், 10 நாட்களுக்கு மேலாகத் தொடரும் இந்த சாலை மறியலால், இரு நாடுகளுக்கும் இடையே தினமும் 8,000 லாரிகள் சென்று வரும் அம்பாசடர் பாலத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
இதனால் கனடாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில், ஓட்டுநர்களின் குழந்தைகளும் உள்ளதால், அவர்களின் உடல் நலன் கருதி போலீசார் லாரிகளை வேகமாக அப்புறப்படுத்தி வருகின்றனர்.