இங்கிலாந்து வான் எல்லைப் பகுதியில் நுழைய முயன்ற ரஷ்ய குண்டு வீச்சு விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் என்ற அச்சத்தில் இங்கிலாந்தும் தனது பங்கிற்கு உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் செய்து வருகிறது.
இந்நிலையில் வடகடல் பகுதியில் இங்கிலாந்து வான் பரப்பின் 100 மைல்களுக்கு முன்னதாக ரஷ்யாவின் Tu-95 Bear F என்ற குண்டு வீச்சு விமானங்கள் பறந்து கொண்டிருந்தன.
இதையறிந்த இங்கிலாந்தின் ராயல் ஏர்ஃபோர்ஸ் விமானங்கள் விரைந்து சென்று ரஷ்ய விமானங்களை திருப்பி அனுப்பின.