சென்னை:
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டை பெற்று நேற்றைய தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர்.
கச்சத்தீவு அருகே நள்ளிரவில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கே இலங்கை கடற்படையினர் ரோந்து பணிக்காக வந்துள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 11 மீனவர்களை கைது செய்து 3 விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்ததாகவும், அவர்களை விசாரணைக்காக காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றனர்.
இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 11 பேருக்கு வரும் 22ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 29 தமிழக மீனவர்கள் மற்றும் 79 படகுகளையும் விடுவிக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், மீனவர்களின் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வு காண தூதரக முயற்சிகளை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்…கச்சத்தீவு திருவிழா- மு.க.ஸ்டாலின் கோரிக்கையை இலங்கை அரசு ஏற்றது