இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ள நிலையில், இன்று இரண்டாவது ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 5 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுக்க, நிதானமாக ஆடிய ரிஷப் பந்த் 18 ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து விராட் கோலி 18 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, கே எல் ராகுலுடன் சூர்யகுமார் யாதவ் இணைந்து, இந்திய அணியில் ரன் உயர்வுக்கு நிதானமாக தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் கேஎல் ராகுல் 2 சிக்சர், 4 பவுண்டரி உட்பட 49 ரன்கள் ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் தனது அரை சதத்துடன் 64 ரன்களுடன் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் நிதானமாக ஆடி 24 ரன்களை சேர்த்து, தனது விக்கெட்டை இழந்தார்.
கடைசி நேரத்தில் களமிறங்கிய தீபக் கோடா 29 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்கம் ஓரளவுக்கு நிதானமாக இருந்தது. ஆனால், அதனை இந்திய பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவும், சாஹாலும் தகர்த்தனர். ஹோப் 27 ரன்னுக்கும், கிங் 18 ரன்னுக்கும், பிராவோ ஒரு ரன்னுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இந்திய அணியின் பந்து வீச்சை சமாளித்து சிறப்பாக ஆட்டம் ஆடிய ஷர்மத் 44 ரன்கள் எடுத்த போது, தீபக் ஹூடா பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஒருநாள் ஆட்டங்களில் தீபக் ஹூடா இன்று டெபியூ பந்து வீச கேப்டன் ரோஹித் வாய்ப்பளித்த முதல் ஓவர்லயே விக்கெட் எடுத்து அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களில் உசேன் 34 ரன்கள், ஓடியன் ஸ்மித் 24 ரன்களை எடுத்து அசத்தினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 46 ஓவர்களில், 193 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த ஒருநாள் தொடரையும் இந்த இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்திய பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட் எடுத்து அசத்தினார்.