சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது ரெட்மி தொகுப்பு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. குறைந்த விலை ரெட்மி நோட் 11, பட்ஜெட் விலை
ரெட்மி நோட் 11எஸ்
ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் இந்திய டெக் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் உயர் தர அம்சங்களுடன் ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.
ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனில், 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் திரை, 108 மெகாபிக்சல் சாம்சங் கேமரா, ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், 33W பாஸ்ட் சார்ஜிங் ஆகியவை சிறப்பம்சங்களாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான புதிய MIUI 13 ஸ்கின் மூலம் இயங்குகிறது.
mi service app: போன் பழுது முதல் 24×7 ஆதரவு வரை… Xiaomi Service plus செயலி அறிமுகம்
ரெட்மி நோட் 11எஸ் அம்சங்கள் (Redmi Note 11S Features)
இந்த ஸ்மார்ட்போனானது, 6.43″ அங்குல முழு அளவு எச்டி+ அமோலெட் திரையுடன், 90Hz ரெப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்டு வருகிறது. 180Hz ஹெர்ட்ஸ் வரை டச் சாம்பிளிங் (Touch Sampling) ஆதரவை இந்த ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே தருகிறது. மேலும், ரெட்மி நோட் 11எஸ் டிஸ்ப்ளே, 409 ppi திரை அடர்த்தி, 2400*1080 பிக்சல்களைக் கொண்டுள்ளது.
ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போன், மீடியாடெக் ஹீலியோ ஜி96 (MediaTek Helio G96) எனும் புதிய மீடியாடெக் ஆக்டாகோர் சிப்செட் உதவியுடன் இயங்குகிறது. கிராபிக்ஸ் எஞ்சினாக மாலி ஜி57 எம்சி2 (ARM Mali-G57 MC2) செயல்படுகிறது. இதில் LPDDR4X ரேம் வகை உள்ளது. 6ஜிபி, 8ஜிபி ரேம் உடன் 3 வேரியண்டுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. 64ஜிபி, 128ஜிபி ஆகிய இரு மெமரி தேர்வுகளை இந்த ஸ்மார்ட்போன் வழங்குகிறது. இந்த உள்ளடக்க மெமரியின் வெர்ஷன் UFS2.2 என்பது கூடுதல் சிறப்பு.
Vivo T1 5G: குறைந்த விலையில் வெறித்தனமான அம்சங்கள்… சியோமியுடன் நேரடியாக மல்லுக்கட்டும் விவோ!
ரெட்மி நோட் 11எஸ் கேமரா (Redmi Note 11S Camera)
இந்த ஸ்மார்ட்போனில் நான்கு பின்புற கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. முதன்மை சென்சாராக 108 மெகாபிக்சல் சாம்சங் எச்.எம்2 உள்ளது. இதன் அப்பெர்சர் f/1.9 ஆகும். இதனுடன் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா ஆகியவையும் உள்ளன. செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 16 மெகாபிக்சல் கேமரா அமோலெட் டிஸ்ப்ளேயின் பஞ்ச் ஹோலில் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஊக்குவிக்க 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான 33W பாஸ்ட் சார்ஜிங் அடாப்டர் போனுடனே வருகிறது. யூஎஸ்பி டைப் சி ஆதவை நோட் 11எஸ் ஸ்மார்ட்போன் பெறுகிறது.
வெறும் ரூ.8,999 விலையில் தொடங்கும் 6000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்கள்!
மேலும், இரட்டை 4ஜி சிம், எஸ்டி கார்டு ஸ்லாட், ஜிபிஎஸ், வைஃபை, ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், ப்ளூடூத் 5.0 ஆகிய இணைப்பு ஆதரவுடன் ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போன் உள்ளது. இந்தியாவில் 5ஜி நெட்வெர்க் சோதனையில் இருப்பதால், 5ஜி இணைப்பு இல்லாமல் ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது பின்னடைவு என்றே சொல்லலாம்.
ரெட்மி நோட் 11எஸ் விலை (Redmi Note 11S price)
ஹொரிசான் ப்ளூ, போலார் வைட், ஸ்பேஸ் பிளாக் ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் நோட் 11எஸ் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இதன் 6ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.16,499ஆக உள்ளது. முறையே 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரியின் விலை ரூ.17,499 ஆகவும், 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரியின் விலை ரூ.18,499 ஆகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. மி ஸ்டோர், மி இந்தியா இணையதளம், அமேசான் ஷாப்பிங் தளம் ஆகியவற்றில் இருந்து இந்த ஸ்மார்ட்போனை பயனர்கள் வாங்கலாம்.
பழைய ப்ளூடூத் வெர்ஷன், 5ஜி நெட்வெர்க் இல்லாதது ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது, சியோமி நிறுவனத்திடம் மிஞ்சிய பொருள்கள் உதவியுடன் இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. எனினும், ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனின் விலையை பார்க்கும்போது, அதன் அம்சங்கள் மேம்பட்டதாகவே இருக்கிறது.
முகக்கவசத்தை தொட வேண்டாம்; எல்லாம் எங்க கேமரா பாத்துக்கும் – ஆப்பிளின் புதிய அப்டேட்!
ரெட்மி நோட் 11எஸ் சலுகைகள் (Redmi Note 11S Offers)
பாங்க் ஆஃப் பரோடா வங்கி வாடிக்கையாளளுக்கு ரூ.1000 வரை தள்ளுபடி கிடைக்கிறதுMI Exchange மூலம் ரூ.16,500 வரை பழைய போன்களுக்குக் கிடைக்கிறதுகட்டணமில்லா மாதாந்திர தவணைத் திட்டத்தை Bajaj Finsev EMI Card மூலம் பெறலாம்ஒரு ஸ்மார்ட்போன் வாங்கினால், அதன் உப பொருள்கள் அல்லது கேட்ஜெட்ஸ்களுக்கு ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கிறது
ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போன் விவரக்குறிப்பு (Redmi Note 11S full specs)
பெயர்ரெட்மி நோட் 11எஸ்அளவு159.87 x 73.87 x 8.09 மில்லிமீட்டர்இயங்குதளம்ஆண்ட்ராய்டு 11 (எம்ஐயுஐ 13)சிப்செட்மீடியாடெக் ஹீலியோ ஜி96, மாலி ஜி57 எம்சி2 கிராபிக்ஸ் எஞ்சின்திரை6.43″ அங்குல முழுஅளவு எச்டி+ அமோலெட் தொடுதிரை, 90Hz ஹெர்ட்ஸ் ரிப்ரஷ் ரேட், 180Hz ஹெர்ட்ஸ் டச் சேம்பிளிங் ரேட், 409 பிபிஐ பிக்சல் அடர்த்திதெளிவுதிறன்2400*1080 பிக்சல்கள்பின்புற கேமரா108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் (f/1.9) + 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் சென்சார் (f/2.2) + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் (f/2.4) + 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் (f/2.4)முன்புற கேமரா16 மெகாபிக்சல் செல்பி (f/2.4)ஸ்லாட்இரண்டு 4ஜி நானே சிம் + 1 எஸ்டி கார்டு (1டிபி வரை)ரேம்6ஜிபி, 8ஜிபிமெமரி64ஜிபி, 128ஜிபிஆதரவுவைஃபை (5GHz), ப்ளூடூத் 5.0, டைப்-சி, ஜிபிஎஸ், ஓடிஜி, எப்.எம், 3.5mm ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்சென்சார்அக்செலெரோமீட்டர், சுற்றுப்புற ஒளி, திசைகாட்டி, கைரேகை, ப்ராக்ஸிமிட்டி, கைரோஸ்கோப்இடங்காட்டிஜிபிஎஸ், BEIDOU, GLONASS, GALILEO, QZSSபேட்டரி5000mAh / 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுநிறங்கள்ஹொரிசான் ப்ளூ, போலார் வைட், ஸ்பேஸ் பிளாக்எடை179 கிராம்விலை6ஜிபி + 64ஜிபி – ரூ.16,499