தீபிகா படுகோன்திரையில் மற்ற நடிகர்களுடன் நெருக்கமாக நடிப்பது குறித்து ரன்வீரின்மிகவும் பெருமையாக நினைக்கிறார் என தான் நினைப்பதாகவும்… மேலும் தனது நடிப்பைப் பற்றி அவர் மிகவும் பெருமைப்படுகிறார் என்றும் கூறியுள்ளார்..
பாலிவுட் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன். கன்னட மொழியில் வெளியான ஐஸ்வர்யா என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.இந்தியில்
ஓம் ஷாந்தி ஒம்
படத்தின் மூலம் அறிமுகமானவர் தீபிகா படுகோன். அங்கு பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
மகான் படம் எப்படி? வெற்றி கண்டாரா விக்ரம்? விமர்சனம் இதோ..
தொடர்ந்து பாலிவுட் சினிமா பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தீபிகா படுகோன் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார்.பாலிவுட் மட்டுமின்றி சர்வதேச அளவில் புகழ் பெற்ற நடிகையாக வலம் வரும் நடிகை தீபிகா படுகோன் சிறந்த நடிகைக்கான உலக சாதனையாளர் விருதை வென்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
நடிகை தீபிகா படுகோன் கடந்த 2018ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர்
ரன்வீர்
சிங்கை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.தற்போது இவர் பிரபாஸுக்கு ஜோடியாக பான் இந்தியா படமொன்றில் நடித்து வருகிறார். இதுதவிர பாலிவுட்டில் கெஹ்ரயான் என்கிற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 11-ந்தேதி ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது.
ஷகுன் பத்ரா இயக்கிய கெஹ்ரையன், நவீன கால உறவுகளின் நாடகம். தீபிகா படுகோன் மற்றும் சித்தாந்த் சதுர்வேதி தவிர, படத்தில் அனன்யா பாண்டே , தைரிய கர்வா, நசிருதீன் ஷா மற்றும் ரஜத் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ட்ரெய்லரில், தீபிகாவும் அவருடன் நடித்த சித்தாந்த் சதுர்வேதியும் முத்தங்களைப் பகிர்ந்துகொள்வதைக் காணலாம். இந்த காட்சிகளுக்கு ரன்வீர் கபூர் அனுமதி பெறப்பட்டதா என சமீபத்திய பேட்டி ஒன்றில் தீபிகாவிடம் கேட்கப்பட்டுள்ளது..
இந்த கேள்விக்கு பதிலளித்த தீபிகா படுகோன்..மற்ற நடிகர்களுடன் நெருக்கமாக நடிப்பது குறித்து ரன்வீரின்மிகவும் பெருமையாக நினைக்கிறார் என தான் நினைப்பதாகவும்… மேலும் தனது நடிப்பைப் பற்றி அவர் மிகவும் பெருமைப்படுகிறார் என்றும் கூறியுள்ளார்.
Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!