ஈரான் அருகில் உள்ள அமெரிக்காவின் படைத்தளங்கள் மற்றும் இஸ்ரேலைத் தாக்கி அழிக்கும் புதிய ஏவுகணையை ஈரான் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
கைபர் பஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை 900 மைல் தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.
முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைபர் பஸ்டர், ஏவுகணை தடுப்பு அமைப்புகளையும் மீறி தாக்கும் தன்மை கொண்டது என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரானிடம் 20 வகையான பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.