அனைத்து மனிதர்களுக்குமே நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் தான் இருக்கும்.
ஆனால் சில உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் அது நமது ஆயுளை குறைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
சோடா
சர்க்கரை கலந்த சோடா உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியது. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் 5,309 பேரிடம் நடத்திய ஆய்வில் தினமும் 20 அவுன்ஸ் சோடாவை உட்கொள்வது வயது முதிர்வை அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது.
அதாவது இது ஆயுளை குறைத்திவிடும். மேலும் செயற்கை இனிப்புகள் சேர்க்கப்படும் சோடக்கள் வேறு உடல்நிலை பிரச்சனைகளையும் ஏற்படுத்திவிடும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
டெலோமியர் என்பது உடலில் உள்ள டி என் ஏ ஆகும். இதன் நீளம் குறைந்தால் உடல் சட சடவென வயதாகித் தொலைக்கும், அதனால் ஆயுள் குறையும்.
அதன்படி ஒவ்வொரு வாரமும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்பவர்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்ணாதவர்களைக் காட்டிலும் குறைவான டெலோமியர்களைக் கொண்டிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சிவப்பு இறைச்சி
சிவப்பு இறைச்சியை அதிகமாக உட்கொள்வது இதய நோய் மற்றும் புற்றுநோயுடன் தொடர்பு கொண்டது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
மேலும் இது டெலோமியர்ஸிலும் விளைவுகளை ஏற்படுத்தலாம்.
ஆல்கஹால்
ஒரு ஆய்வில், ஆல்கஹால் டெலோமியர் சுருக்கத்தை விரைவுபடுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமாக குடிப்பவர்களில் டெலோமியர்ஸ் வியத்தகு அளவில் குறைவாக இருக்கும் எனவும் ஆய்வு கூறுகிறது.
எனவே மது அருந்துபவர்கள் எவ்வளவு குடிக்கிறீர்கள் என்பதைக் கவனத்தில் கொள்வது நல்லது.