இந்தியாவில்
சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா
ஸ்மார்ட்போன் அதன் தொகுப்பு எஸ்22, எஸ்22+ ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. சாம்சங் கேலக்ஸி அன்பேக்ட் நிகழ்வு (Galaxy Unpacked event) மூலம் இந்த ஸ்மார்ட்போன்கள் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் சாம்சங் எஸ் 22 அல்ட்ரா அதிக திறன் கொண்ட ஸ்மார்ட்போனாக பார்க்கப்படுகிறது.
திறன்மிக்க எக்சினோஸ் சிப்செட், ப்ரோ வகை சினிமேட்டிக் கேமரா, கார்னிங் கொரில்லா விக்டஸ்+ பாதுகாப்பு, 1TB மெமரி வேரியண்ட் என அசத்தல் அம்சங்களுடன் அதிரடியாய் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.
முகக்கவசத்தை தொட வேண்டாம்; எல்லாம் எங்க கேமரா பாத்துக்கும் – ஆப்பிளின் புதிய அப்டேட்!
சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா சிறப்பம்சங்கள் (samsung galaxy s22 ultra specs)
இந்த போல்டான ஸ்மார்ட்போன் 6.8″ அங்குல வளைவான எட்ஜ் கர்வ் டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது QHD+ டைனமிக் அமோலெட் 2X டிஸ்ப்ளே ஆகும். இதில் 120Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் உடன் 240Hz ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் உள்ளது. விஷன் பூஸ்டர், Eye Comfort பாதுகாப்பு ஆகியவை கூடுதல் அம்சங்களாக கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா திரையில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் திரை பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா விக்டஸ்+ வழங்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ONE UI 4.1 ஸ்கின் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. மேலும், 4nm நானோமீட்டர் கட்டமைப்புடன் உருவாக்கப்பட்ட எக்ஸினோஸ் 2200 எனும் அதி திறன் வாய்ந்த 3Ghz சிப்செட் கொண்டு ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. பிரிட்டன், அமெரிக்காவில் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் இந்தியர்கள் தானே என்று பாரபட்சம் காட்டி இருக்கிறது சாம்சங். கேமர்களுக்கு ஏற்ற வகையில் AMD RDNA2 கிராபிக்ஸ் எஞ்சினை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
Motorola Edge 30 Pro: 144 ரெப்ரெஷ் ரேட்; SD 8 Gen 1 சிப்செட்… பிரம்மிப்பூட்டும் அம்சங்களுடன் மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ
சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா கேமரா (
samsung galaxy s22 ultra camera)
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் கொண்ட அமைப்பு உள்ளது. அதில், முதன்மையாக 108 மெகாபிக்சல் கேமரா உள்ளது. கூடுதலாக 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், தலா 10 மெகாபிக்சல் என இரண்டு டெலிபோட்டோ கேமராவும் இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அங்கமாக உள்ளது. இதன் மூலம் 10X தூரம் வரை ஆப்டிகல் ஜூம் செய்துகொள்ள முடியும். டெலிப்போட்டோ லென்ஸ் உதவியுடன் சினிமா தரத்தில் புகைப்படங்கள், வீடியோக்களை பயனர்கள் எடுக்க முடியும். தெளிவான படங்களுக்காக பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வீடியோ அழைப்புகள் மற்றும் செல்பி எடுப்பதற்காக 40 மெகாபிக்சல் கேமரா கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளது. 100X ஸ்பேஸ் ஜூம் வரை இந்த கேமரா ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகிறது. பேட்டரியை திறனூட்ட 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது.
oppo reno 7 pro: உலகின் முதல் RGBW செல்பி கேமரா… அப்படி என்ன ஸ்பெஷல் கேமரா இது?
சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா விலை (samsung galaxy s22 ultra price)
சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா 4 வேரியண்டுகளில் வெளியிடப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி, 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி, 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி, 12ஜிபி ரேம் + 1ஜிபி மெமரி ஆகிய நான்கு வேரியண்டுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ப்ளுடூத் 5.2, வைஃபை 6, மேம்பட்ட வேலைகளுக்காக எஸ் பென் (S Pen) போன்ற மேம்பட்ட இணைப்பு ஆதரவுகள் உள்ளன.
5ஜி ஆதரவைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், பாந்தோம் பிளாக், பாந்தோம் வைட், கிரீன், பர்கண்டி ஆகிய நான்கு வண்ணத் தேர்வுகளில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் தொடக்க விலை இந்திய சந்தையில் சுமார் ரூ.85,000 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.