புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா தொற்று 67,084 என்றளவில் உள்ளது. அன்றாட கரோனா பரவல் விகிதமும் 4.44% என்றளவில் சரிந்தது.
கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி இந்தியாவில் முதல் ஒமைக்ரான் தொற்று கண்டறிந்த பிறகு கரோனா பரவல் மீண்டும் அதிகரித்தது. நாடுமுழுவதும் 3-வது அலை ஏற்பட்டு நாடு முழுவதும் மீண்டும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளும் அமலுக்கு வந்தன.
பின்னர் பிப்ரவரி தொடக்கத்தில் இருந்தே அன்றாட கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. நாடுமுழுவதம் கரோனா பரவல் குறித்த கடந்த 24 மணி நேர நிலவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
* கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67,084 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
* அன்றாட பாசிடிவிட்டி விகிதம் 4.44% என்றளவில் உள்ளது.
* தற்போது சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 7,90,789
* சிகிச்சையில் உள்ளோர் விகிதம்: 1.86%
* இதுவரை கரோனாவால் பாதித்தோர் மொத்த எண்ணிக்கை:4,24,78,060.
* கடந்த 24 மணி நேரத்தில் 1,67,882 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்தனர்.
* இதுவரை கரோனா பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை: 4,11,80,751.
* கடந்த 24 மணி நேரத்தில் 1,241 பேர் உயிரிழந்தனர்.
* கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,06,520.
* இதுவரை நாடு முழுவதும் 1,71,28,19,947 கோடி (171.28 கோடி ) பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.