சென்னை: இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடா? அல்லது மதரீதியாக பிளவுபட்ட நாடா? என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி கேள்வி எழுப்பியுள்ளார். பல கோயில்களில் உரிய நடைமுறைகளும், மரபுகளும் பின்பற்றப்படுகின்றன. நாட்டில் ஹிஜாப், கோயில்களில் வேட்டி ஆகியவற்றுக்காக போராடுவது அதிர்ச்சியளிக்கிறது என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவது மதரீதியாக நாட்டை பிளவுபடுத்துவது போன்றது என்றும் நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.