சர்வதேச அளவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனையடுத்து பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது.
இந்தியாவிலும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை தினந்தோறும் கணிசமாக குறைந்து வருகிறது. இதனையடுத்து கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளில் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது.
இவற்றில் முக்கிய அம்சமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் 14 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு எப்போது? -வெளியானது முக்கிய அப்டேட்!
இந்த தளர்வுகளின்படி பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்தியா வரும் பயணிகள் இனி 7 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தொற்று குறைவின் காரணமாக, விமான நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென்ற கட்டாயமும் இல்லை.
வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் தங்களது உடல்நிலையை சுயமாக கண்காணித்து கொள்ளும் விதத்தில் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டால் போதுமானது.
மேலும் பயணிகள் புறப்படும் 72 மணி நேரத்திற்கு முன்பு பதிவேற்றம் செய்யும் கொரோனா பரிசோதனை சான்றிதழுக்கு பதிலாக, உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள 2 டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.