இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் பதவியேற்றுள்ளார்.
இலங்கைக்கான தூதுவராக ஜூலி சுங்கிற்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் பெருமையடைவதாக பிரதி இராஜாங்கச் செயலாளர் வெண்டி ஆர். ஷெர்மன் ட்வீட் செய்துள்ளார்.
சியோலில் பிறந்த ஜூலி சுங் கொரிய, ஜப்பானிய, ஸ்பானிஷ் மற்றும் கெமர் மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர்.
கம்போடியாவின் புனோம் பென் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணைத் தூதராகவும், தாய்லாந்தின் பேங்காக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் மாற்றம் ஒருங்கிணைப்பாளருக்கான தலைமைப் பணியாளராகவும் இருந்தார். கொலம்பியா, வியட்நாம் மற்றும் ஜப்பானில் உள்ள அமெரிக்க தூதரகங்களிலும், சீனாவின் குவாங்சோவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்திலும் பணியாற்றியுள்ளார்.
கலிபோர்னியா-சான் டியாகோ பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை கலைப் பட்டத்தையும், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச மற்றும் பொது விவகாரப் பள்ளியில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Honored to swear in Julie Chung as Ambassador to Sri Lanka. Amb. Chung’s distinguished @StateDept career & exceptional leadership make her the perfect choice to represent the American people & advance the U.S.-Sri Lanka partnership. I look forward to continuing our work together. pic.twitter.com/fI6VChCTph
— Wendy R. Sherman (@DeputySecState) February 9, 2022