லண்டன்:
பிரிட்டன் ராணி எலிசபெத் அரியணையில் அமர்ந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் கொண்டாட்டங்களில் பங்கேற்ற
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நேற்று மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் சுய தனிமைபடுத்தலில் உள்ளார்.
73 வயதான சார்லஸ், இங்கிலாந்தின் வின்செஸ்டர் நகரில் திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாததால் ஏமாற்றமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் எங்கு தங்கியுள்ளார் என்பது பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாக வில்லை.
சார்லஸ் முதல் தடவையாக 2020 ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு லேசான அறிகுறிகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அவர் கடந்த டிசம்பரில் கொரோனா தடுப்பு பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்… நியூசிலாந்தில் தடுப்பூசி எதிர்ப்பு போராட்டக்காரர்கள் 120 பேர் கைது