உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில், 60 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசச் சட்டமன்றத்திற்கு மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், முதற்கட்டமாக மேற்கு உத்தரப்பிரதேசத்தின் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 58 தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரு சில இடங்களில் வாக்கு இயந்திரத்தில் கோளாறுகள் ஏற்பட்டபோதிலும், வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தேர்தலில் 623 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் ஆளும் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகியவற்றிடையே போட்டி நிலவுகிறது.