உலகளவில் பங்குச்சந்தை முதலீட்டில் அதிகம் லாபம் பார்த்த டெக் துறையில் தற்போது பல புதிய டெக்னாலஜி வந்தாலும், அனைத்து வர்த்தகச் சந்தையிலும், அனைத்து நிறுவனங்களும் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனை வாடிக்கையாளர்கள் இழப்பு.
4 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்களுக்கு இழப்பு.. அமெரிக்கா ஆதிக்கத்தை காட்டியது..!
இந்தப் பிரச்சனை தான் தற்போது பேஸ்புக் நிறுவனத்தை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் கடந்த 20-22 வருடத்தில் யாரும் பார்க்காத ஒரு மோசமான தருணமான டாட் காம் பபுள்-ஐ விரைவில் பார்க்கப்போகிறோம்.
மெட்டா பெரிய உதாரணம்
பெரும் முதலீட்டாளர்கள் முதல் சிறு முதலீட்டாளர்கள் வரையில் அனைவரும் நீண்ட கால முதலீட்டை விரும்பாத நிலையில், எதிர்காலத்தில் வரபோகும் ஒரு சேவையை உருவாக்க பல ஆண்டுக் காலம் நஷ்டத்தை எதிர்கொள்ளும் நிறுவனத்திலும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய விரும்புவது இல்லை. இதற்கான உதாரணம் தான் பேஸ்புக்-ன் மெட்டா.
போட்டி
மெட்டா நிறுவனம் டிக்டாக், யூடியூப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் வாடிக்கையாளர்களை இழந்து வரும் நிலையில் மெட்டாவெர்ஸ் என்னும் சேவையில் அதிகளவிலான முதலீட்டைச் செய்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.
அமேசான், மைக்ரோசாப்ட், ஆல்பபெட்,
ஆனால் இதேவேளையில், அமேசான், மைக்ரோசாப்ட், ஆல்பபெட், டெஸ்லா, போன்ற பல முன்னணி நிறுவனங்கள் பல புதிய தொழில்நுட்பம் அல்லது சேவையில் முதலீடு செய்தாலும் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தொடர்ந்து முதலீட்டையும் பெற்று வருகிறது.
2 பிரிவுகள்
இதே நேரத்தில் வல்லரசு நாடுகளில் புதிய டிஜிட்டல் வாடிக்கையாளர்களைப் பெறுவதில் மிகப்பெரிய சிக்கலும், தொய்வும் ஏற்பட்டு உள்ளது. இது டெக் மற்றும் ஐடி வேலையில் இருக்கும் நிறுவனங்களின் வளர்ச்சி பெரும் தடையாக மாறியுள்ளது.
வல்லரசு நாடுகள்
இதே நேரத்தில் வல்லரசு நாடுகளில் புதிய டிஜிட்டல் வாடிக்கையாளர்களைப் பெறுவதில் மிகப்பெரிய சிக்கலும், தொய்வும் ஏற்பட்டு உள்ளது. இது டெக் மற்றும் ஐடி சேலையில் இருக்கும் நிறுவனங்களின் வளர்ச்சி பெரும் தடையாக மாறியுள்ளது.
டாட் காம் பபுள்
இதனால் எப்போது வேண்டுமானாலும் சர்வதேச டெக் துறையில் டாட் காம் பபுள் வெடிக்கலாம். இதனால் டெக், ஐடி, டிஜிட்டல் சேவை பிரிவில் இருக்கும் நிறுவனங்களின் நிலைமை தலைகீழாக மாறலாம் என PPFAS உயர் அதிகாரி ராஜீவ் தாக்கர் தெரிவித்துள்ளார்.
40வயதைக் கடந்தவர்கள் கட்டாயம் 2K டாட் காம் பபுள்-ஐ மறந்திருக்க முடியாது. மீண்டும் இதேபோல் ஒன்று வந்தால் இந்தியாவின் நிலைமை என்ன..?
dotcom bubble bust about to come after 22 years, Big trouble for IT, tech cos
dotcom bubble bust about to come after 22 years, Big trouble for IT, tech cos ஐடி துறைக்குப் பாதிப்பா..?! 22 வருடத்திற்குப் பின் மீண்டும் டாட்காம் பபுள் வெடிக்கப்போகிறதா..?