புதுடெல்லி:
குடியரசுத்தலைவர் மாளிகையின் வருடாந்திர தோட்டத்திருவிழாவையொட்டி அங்குள்ள வரலாற்று புகழ் பெற்ற முகலாய தோட்டத்தை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார்.
வண்ண வண்ண விதவிதமான மலர்கள் நிறைந்த இந்த தோட்டத்தில் இந்த ஆண்டு புதிதாக 11 வகையான துலிப் மலர்கள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காற்றைத் தூய்மைப்படுத்தக் கூடிய தாவரங்களும் இந்தத் தோட்டத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிட த்தக்கது.வருடந்தோறும் இந்த மலர் தோட்டத்தை பொது மக்களும் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது.
#WATCH | Delhi: The Mughal Gardens to open for the public from February 12 to March 16 between 1000 hrs to 1700 hrs. Entry will be through advance online booking only: President’s Secretariat pic.twitter.com/a0zA2K3FaS
— ANI (@ANI) February 10, 2022
இம் மாதம் 12 ஆம் முதல் மார்ச் 16ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொது மக்கள் இந்த தோட்டத்தை பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தோட்டப் பராமரிப்பு பணிகளுக்காக திங்கட்கிழமைகள் மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.
ஆன்லைனில் முன்பதிவு செய்த பார்வையாளர்கள் மட்டும் அனுமதிக்கப் படுவார்கள். இதற்கான முன்பதிவு https://rashtrapatisachivalaya.gov.in or https://rb.nic.in/rbvisit/visit_plan.aspx. என்ற இணையதளங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக இந்த ஆண்டும், நேரடி நுழைவு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று குடியரசுத் தலைவர் மாளிகை செயலகம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்…
22 ஆண்டு பணிசெய்த ஊழியருக்கு பென்ஸ் காரை பரிசாக அளித்த தொழிலதிபர்