கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல, மெல்ல தளர்த்தப்பட்டு வருவதையடுத்து பிரிட்டனில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இதனால் அங்கு சமையல் எரிவாயுவின் தேவை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
இதன் எதிரொலியாக, வரலாறு காணாத அளவுக்கு எரிவாயு சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு (2021) துவக்கித்தில் விற்பனை செய்யப்பட்டதைவிட 300% அளவுக்கு சமையல் சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளதாக
பிரிட்டன்
நுகர்வோர் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்ரன.
அத்துடன் பொதுமக்களின் மின்சாரம், பெட்ரோல். டீசல் பயன்பாட்டுக்கான செலவும் இனிவரும் காலங்களில் எகிறும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பிட்டின்படி 2022-23 நிதியாண்டு துவக்கத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்,டீசல், மின்சாரம் ஆகிய அத்தியாவசிய தேவைகளுக்கான செலவு சராசரியாக 70 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கும் என தெரிகிறது.
செக்ஸ் இணையதளங்களில் மூழ்கி இருப்பவர்களுக்கு வருகிறது செம செக்!
கொரோனா ஊரடங்கு, பொதுமுடக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிட்டனில் பல்வேறு தொழில் துறைகள் முடங்கியுள்ளதையடுத்து ஏழை.நடுத்தர மக்களின் மாதந்திர வருவாய் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நெருக்கடியான சூழலில் சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருவது பிரிட்டன் மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.