கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் ரயில் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது இந்த தகவலை அவர் வெளியிட்டார்.
புதிய ரயில் பாதைகளை அமைக்கும் பணியை எதிர்காலத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட மாட்டாது.
புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் பல திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
உள்நாட்டு ஊழியர்களை பயன்படுத்தி இந்த ஒப்பந்தம் ஆரம்பிக்கப்படும். முடிந்தளவு வெளிநாட்டு ஊழியர்களுடன் ஒப்பந்தமின்றி இந்த திட்டம் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விமான நிலையத்தில் இருந்து ரயிலில் ஏறி செல்வதென்றால் எவ்வளவு இலகுவான விடயமாக இருக்கும்.
அதற்கமைய இந்த திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும்.
திட்டத்திற்கமைய விமான நிலையத்தில் இருந்து கொழும்பு, குருநாகல், கண்டி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல இடங்களுக்கு செல்ல கூடிய வகையில் இந்த திட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.