சீனாவில் வேலைகளை உருவாக்கி விட்டு, இந்தியாவில் கார்களை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றது டெஸ்லா என குற்றம் சாட்டியிருக்கிறார் மத்திய அமைச்சர் ஒருவர்.
அமெரிக்காவின் முன்னணி மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, உலகம் முழுவதும் தனது விற்பனையை செய்து வருகின்றது. விற்பனை மையங்களையும் உருவாக்கி வருகின்றது.
2 சக்கர வாகன கடனுக்கு எது சிறந்தது.. எங்கு வட்டி குறைவு..! #banks #2wheelerloan
குறிப்பாக இந்தியாவில் அதன் கார்களை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றது.
வரியை குறையுங்க?
ஆனால் இந்தியாவில் வரி விகிதம் அதிகம் என்று, வரி விகிதத்தினை குறைக்க டெஸ்லா கோரிக்கை விடுத்து வருகின்றது. ஆனால் இந்திய அரசோ பிஎல்ஐ திட்டத்தில் இங்கு உற்பத்தி செய்ய கூறி வருகின்றது. இந்தியாவினை பொறுத்த வரையில் வாகன சந்தை என்பது மிகப்பெரியது. ஆக பல நாடுகளை சேர்ந்த வாகன நிறுவனங்களும் இங்கு விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.
மின்சார வாகனங்கள் மீதான ஆர்வம்
சர்வதேச அளவில் எரிபொருட்களின் விலையானது அதிகரித்து வரும் நிலையில், மின்சார வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இருசக்கர வாகனம், மின்சார கார்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் தான் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய சந்தை வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள டெஸ்லா தொடர்ச்சியாக ஆர்வம் காட்டி வருகின்றது.
வரி விலக்கு முடியாது?
பல்வேறு மாநில அரசுகளும் தொடர்ந்து எலான் மஸ்கிற்கு அழைப்பு விடுத்து வருகின்றன. எனினும் கடந்த ஆண்டிலேயே இறக்குமதி வரியை ரத்து செய்ய டெஸ்லா நிறுவனம் கோரிக்கை வைத்த நிலையில், இந்தியாவில் ஆலை அமைத்து உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு தான் சலுகைகளை அளிக்க முடியும். வெறுமனே விற்பனையை மட்டும் செய்யும் நிறுவனங்களுக்கு வரி விலக்கு கொடுக்க முடியாது என திட்டவட்டமாக மத்திய அரசு கூறியது.
வேலை வாய்ப்புகள்?
இவ்வாறு இந்தியாவில் உற்பத்தி செய்யும் போது வேலை வாய்ப்புகளும் பெரும் என அரசு வாதிடுகின்றது. உண்மையில் இன்றும் இந்தியாவின் வேலை வாய்ப்பு சந்தையில் மிக முக்கிய பங்கு வகிப்பது ஆட்டோமொபைல் உற்பத்தி தான்.
இதற்கிடையில் தான் சீனாவில் வேலையை உருவாக்கி விட்டு, விற்பனையை மட்டும் இந்தியாவில் செய்ய நினைக்கிறது டெஸ்லா என நாடளுமன்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் கிருஷ்ணா பால் கூறியுள்ளார்.
Giving jobs to China and selling only in India: Krishan Pal Gurjar
Giving jobs to China and selling only in India: Krishan Pal Gurjar/சீனாவுக்கு வேலையை கொடுத்து விட்டு விற்பனை மட்டும் இந்தியாவிலா.. இது என்ன நியாயம்..!