தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி, திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியின் வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 119வது வார்டில் போட்டியிடும் திமுக பெண் வேட்பாளர் பேண்டு வாத்தியங்களுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டில் கவுன்சிலர் பதவிக்காக போட்டியிடும் திமுக பெண் வேட்பாளரின் கணவர், குத்தாட்டம் போட்டு தனது மனைவிக்காக வாக்கு சேகரித்தார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 117வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தியாகராய நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் கூடியிருந்த பாஜகவினரிடம் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 124-வது வார்டில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 129-வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பேண்டு வாத்தியங்கள் வாசித்த படி, வீதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட 7வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தூசி மோகன் உணவகம் ஒன்றில் பரோட்டா தயாரித்து கொடுத்து வாக்கு சேகரித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 27வது வார்டில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர், பேண்டு வாத்தியங்களுடன் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.