ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்மார்க்கில் இன்று மதியம் 12.45 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. குல்மார்க்கில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 3.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
பிப்ரவரி 5-ம் தேதி 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதும், கடந்த 5 நாளில் காஷ்மீரில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.