நடிகர் ரஜினிகாந்த் சமீபகாலமாக பல பிரச்சனைகளால் சோர்ந்திருந்தார். இனி அவர் படங்கள் நடிப்பாரா இல்லையா என்ற கேள்வியும் எழுந்தது. கடைசியாக வெளியான சில படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் அதையெல்லாம் பொய்யாகும் வகையில்
ரஜினி
தற்போது தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்.
ரஜினியின் அடுத்த படத்தை வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், தேசிங்கு பெரியசாமி என இவர்களில் ஒருவர் இயக்குவார் என்று எதிர்பாத்திருந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றி படங்களை இயக்கி தற்போது பீஸ்ட் படத்தில் விஜய்யை இயக்கி வரும்
நெல்சன்
அடுத்ததாக ரஜினியை இயக்கவுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில்
அனிருத்
இசையமைக்கின்றார். தற்போது கலக்கலாக வெளியான ப்ரோமோவின் மூலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது படக்குழு. இந்த ப்ரோமோ வெளியாகி சில மணிநேரம் கூட ஆகாத நிலையில் இப்படத்தை பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
வெளியானது தலைவர் 169 அதிகாரபூர்வ அறிவிப்பு..கலக்கல் ப்ரோமோவில் அசத்தல் ரஜினி..!
அதாவது மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற
ப்ரோ டாடி
படத்தின் ரீமேக் தான் இந்த தலைவர் 169 என சிலர் கூறிவருகின்றனர்.
மோகன்லால்
மற்றும்
பிரித்விராஜ்
நடிப்பில் வெளியான ப்ரோ டாடி படத்தை பிரித்விராஜ் இயக்கியிருந்தார்.
காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகியிருந்த இப்படம் OTT யில் வெளியானது. இதைத்தொடர்ந்து ரஜினி சில நாட்களுக்கு முன்பு மோகன்லாலை தொலைபேசியில் அழைத்து பேசியதாகவும் சில தகவல்கள் வந்தன.
இதன் காரணமாக இப்படம் ப்ரோ டாடி ரீமேக்காக இருக்குமோ என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் நெல்சன் இயக்கும் ரஜினியின் இந்த படம் புது கதையாகவே இருக்கும் என்பதே பலரது கருத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பங்கர்ராஜு வெற்றி விழா : நன்றி தெரிவித்த இயக்குனர்!