பெங்களூரு-ஷிவமொகா தீர்த்தஹள்ளியின், துாதுர் — முன்டுவள்ளி இடையே, புதிய பாலம் பணிகளை துவங்க, முதல்வர் பசவராஜ் பொம்மை ஒப்புதல் அளித்துள்ளார்.ஷிவமொகா தீர்த்தஹள்ளியின், பா.ஜ., எம்.எல்.ஏ.,வுமான, உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, தன் தொகுதி தலைவர்கள் குழுவுடன், முதல்வர் பசவராஜ் பொம்மையை, நேற்று சந்தித்தார். துாதுர் – முன்டுவள்ளி புதிய பாலம் பாலம் கட்ட, ஒப்புதல் அளிக்கும்படி கோரினார்.இப்பணிகள் முடிவடைந்தால், குப்பள்ளி, மிருகவதே, சிப்புலகுட்டே, சிருங்கேரி, ஹொரநாடு, என்.ஆர்.புரா போன்ற சுற்றுலா தளங்களுக்கு செல்ல, உதவியாக இருக்கும்.பல்வேறு கிராமங்களிலிருந்து, மாளூரு பள்ளி, கல்லுாரிகளுக்கு படிக்க வரும் மாணவர்களும் பயனடைவர் என, குழுவினர் விவரித்தனர். இதை ஏற்றுக்கொண்ட முதல்வரும், பணிகளை துவங்க ஒப்புதல் அளித்தார்.தீர்த்தஹள்ளி மக்களின், நீண்ட நாள் வேண்டுகோள் தற்போது நிறைவேறியுள்ளது. துாதுர் – முன்டுவள்ளி இடையே, துங்கா ஆற்றுக்கு குறுக்கே, 20 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்டப்படும்.
பெங்களூரு-ஷிவமொகா தீர்த்தஹள்ளியின், துாதுர் — முன்டுவள்ளி இடையே, புதிய பாலம் பணிகளை துவங்க, முதல்வர் பசவராஜ் பொம்மை ஒப்புதல் அளித்துள்ளார்.ஷிவமொகா தீர்த்தஹள்ளியின், பா.ஜ.,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.