பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம் – போலீசார் அறிக்கை
பெட்ரோல் குண்டு வீச்சில் நந்தனம் பகுதி ரெளடி கைது
பாஜகவின் நீட் நிலைப்பாட்டை எதிர்த்து சம்பவம் என வாக்குமூலம்
“ஏற்கனவே பெட்ரோல் குண்டு வீசிய வழக்குகளில் கைதானவன்”
தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம் தொடர்பாக காவல்துறை அறிக்கை
பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக நந்தனத்தைச் சேர்ந்த கருக்கா வினோத் என்பவன் கைது – போலீசார்
மத ரீதியாகவோ, அரசியல் சம்பந்தமாகவோ மேற்படி குற்ற வழக்கில் அந்த நபர் ஈடுபடவில்லை – காவல்துறை
பொதுப் பிரச்சினையில் இந்த நபர் தாமாகவே ஈடுபட்டு குடிபோதையில் இது போன்று நடந்துகொள்ளும் மனநிலை கொண்டவர் – காவல்துறை
நீட் தேர்வு தொடர்பாக பாஜகவின் நிலைப்பாட்டை எதிர்த்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசியதாக கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம் – காவல்துறை
பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ரெளடி கருக்கா வினோத், தேனாம்பேட்டை காவல்நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி
ரெளடி கருக்கா வினோத் மீது 4 கொலை முயற்சி வழக்குகள் உட்பட சுமார் 10 குற்ற வழக்குகள் உள்ளன – காவல்துறை
2015ல் மாம்பலம் பகுதியில் உள்ள மதுக்கடை ஒன்றை மூட வலியுறுத்தி, பெட்ரோல் குண்டு வீசியதாக கைது செய்யப்பட்டவன் கருக்கா வினோத்
2017ல் தேனாம்பேட்டை காவல்நிலைய வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டவன் கருக்கா வினோத் – காவல்துறை