பிரதமர் மோடி வரும் 14, 16, 17 ஆகிய தேதிகளில் பஞ்சாப் மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
மாளவா, தோவாபா, மாஜா ஆகிய மூன்று பகுதிகளையும் உள்ளடக்கி இந்தப் பிரச்சாரத்தை மோடி மேற்கொள்ள உள்ளார். முதல் கூட்டம் ஜலந்தரில் 14 ஆம் தேதி நடைபெறுகிறது.இரண்டாவது பிரச்சாரக் கூட்டம் 16 ஆம் தேதி பதான்கோட்டிலும் மூன்றாவது கூட்டம் அபோஹரில் 17 ஆம் தேதியும் நடைபெற உள்ளதாக பஞ்சாப் மாநில பாஜக பொதுச் செயலாளர் சுபாஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிரதமர் மோடியின் பிரச்சாரம் உட்கட்சிப் பூசல்களுக்கு ஆளான அம்மாநில காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும்