விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்.’ படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில் ‘இப்படம் மலேசியா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது’ எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. விஷ்ணுவும், தனது ட்விட்டர் பக்கத்தில் ‘மலேசிய, குவைத் ஆடியன்ஸ் மன்னிக்கவும்’ என ட்வீட்டியிருக்கிறார். படத்தை புரோமோட் செய்யும் பொருட்டு ட்விட்டரில் தனது பெயரை இர்ஃபான் அஹமத் என மாற்றியிருக்கிறார். இது படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர்.
இப்படத்தை விஷ்ணு விஷாலே தயாரித்து, நடித்திருக்கிறார். இப்படம் 22 கோடிக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது என்கிறார்கள். கௌதம் மேனனின் உதவியாளர் மனு ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் கௌதம் மேனன், ரெபா மோனிகா, மஞ்சிமா மோகன், ரைசா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கான தடை குறித்து இயக்குநர் மனு ஆனந்திடமே கேட்டேன்.
“எங்க படத்தை மலேசியா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் தடை பண்ணியிருக்காங்கனு சொல்றது தவறு. அங்கெல்லாம் எங்க படம் சென்ஸார் செய்யப்படலை. படத்தில் ‘இஸ்லாம்’ உள்பட சில வார்த்தைகள் இடம் பெற்றாலே அங்கே அவர்கள் தணிக்கை செய்யமாட்டார்கள். இது போன்ற விஷயங்களாலே மேற்கண்ட நாடுகள்ல எங்க படம் ரிலீஸ் செய்யப்படலை” என்கிறார் மனு.