வாஷிங்டன்: அமெரிக்காவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட சில தினங்களில், 40 செயற்கை கோள்கள், திடீரென ஏற்பட்ட மின்காந்தப் புயலால் எரிந்து சாம்பலாயின.
அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் எலன் மஸ்க்கின், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் விண்வெளி சுற்றுலா, இணைய சேவை உள்ளிட்ட வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் உலகளவில் இணைய வசதியை ஏற்படுத்த, 2,000க்கும் மேற்பட்ட, ‘ஸ்டார்லிங்க்’ செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.
கடந்த வாரம் மட்டும் அது, 49 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியது. இந்த செயற்கை கோள்களை பூமியில் இருந்து, 210 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்த முயன்றபோது, திடீரென பயங்கர வேகத்தில் மின்காந்தப் புயல் பூமியை தாக்கியது. இது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின், 40 செயற்கை கோள்களை தாக்கி அழித்தது.
வாஷிங்டன்: அமெரிக்காவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட சில தினங்களில், 40 செயற்கை கோள்கள், திடீரென ஏற்பட்ட மின்காந்தப் புயலால் எரிந்து சாம்பலாயின.அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.