என் சகோதரிக்கு மார்பகப் புற்றுநோய் வந்து வலது மார்பை அறுவை சிகிச்சை செய்து அகற்றினோம். ஆனாலும் பலனில்லை. தற்போது அவரது உடலில் புற்றுநோய் பரவுவதாகவும், காப்பாற்ற முடியாது என்றும் மருத்துவர் கூறுகிறார். இதற்குத் தீர்வு உண்டா…?
– சிவகாமி பிரம்மநாயகம் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் ரத்னாதேவி.
“உங்கள் சகோதரியின் வயது, புற்றுநோயின் எந்த ஸ்டேஜில் கண்டுபிடித்தார்கள், இதுவரை அவருக்கு அளிக்கப்பட்ட மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் என்னென்ன என எந்த விவரமும் இந்தக் கேள்வியில் இல்லை. அந்தத் தகவல்கள் இருந்தால்தான் சம்பந்தப்பட்ட நோயாளியின் உடல்நிலை பற்றிய தெளிவான முடிவுக்கு வரவும், அடுத்து அவருக்கு என்ன தேவை என்கிற சிகிச்சையையும் கணிக்க முடியும்.
உங்கள் சகோதரிக்கு புற்றுநோய் பரவியிருப்பதாக பொதுவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். மார்பகப் புற்றுநோயைப் பொறுத்தவரை அது நுரையீரல், கல்லீரல், மூளை மற்றும் எலும்புகளில் பரவக்கூடியது. உங்கள் சகோதரிக்கு அப்படி இந்த நோய் எந்தெந்தப் பகுதிகளில் பரவியிருக்கிறது, எந்த அளவுக்குப் பரவியிருக்கிறது என்ற விவரமும் இல்லை.
Also Read: Doctor Vikatan: குழந்தை பிறந்து 5 வருடங்கள் ஆகியும் சுரக்கும் தாய்ப்பால்; புற்றுநோயின் அறிகுறியா?
அந்த விவரங்கள் தெரிந்தால் உங்கள் சகோதரிக்கு மேற்கொண்டு சிகிச்சைகள் தேவையா அல்லது கட்டுப்பாட்டில் மட்டுமே வைத்திருக்க முடியுமா என்றெல்லாம் சொல்ல முடியும்.”
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?