சீன டெக் நிறுவனமான சியோமி, ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுடன், ரெட்மி ஸ்மார்ட் டிவி,
ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ
ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தகவல் சாதனங்கள் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடப்தக்கது. இந்நிலையில், ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ குறித்த முழு விவரங்களை காணலாம்.
இந்தியாவில் சியோமி தரப்பில் வெளியிடப்பட்ட மி பேண்ட் 4, மி பேண்ட் 5, மி பேண்ட் 6 ஆகிய மூன்று ஸ்மார்ட் பேண்டுகளும் விற்பனையில் சக்கப்போடு போட்டது. இதற்கு போட்டியாக களமிறக்கப்பட்ட ஸ்மார்ட் போண்டுகள் அனைத்தும் சிறிதளவு விற்பனை சந்தையில் ஜொலித்தாலும், இன்றளவும் சியோமியின் மி ஸ்மார்ட் பேண்ட் தான் பயனர் விருப்பமாக இருந்து வருகிறது.
mi service app: போன் பழுது முதல் 24×7 ஆதரவு வரை… Xiaomi Service plus செயலி அறிமுகம்
ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ அம்சங்கள்
(Redmi Smart Band Pro Features)
தற்போது, கூடுதல் மேம்பட்ட அம்சங்களுடன் புதிய ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்பேண்டின் அம்சங்களை பொருத்தவரை, 1.47″ அங்குல அளவு AMOLED டிஸ்ப்ளே, ஆல்வேஸ் ஆன் வசதி உடன் இருக்கிறது. இத்துடன் மெல்லிய பெசல்கள் உள்ளது. இதன் டிஸ்ப்ளே 450 நிட்ஸ் பிரைட்னஸ், 194×368 பிக்சல் ரெசல்யூஷன், 283 ppi திரை அடர்த்தி, 50-க்கும் அதிகமான ஸ்மார்ட் பேண்ட் முகங்களை ஆகிய சிறப்புகளைக் கொண்டுள்ளது.
பாலி கார்பனேடால் ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், Propreitary இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட் பேண்ட் செயலாற்றுகிறது. இதில் Ambiq Apollo 3.5 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் பேண்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் TPU ஸ்டிராப், மேட் ஃபினிஷ் கொண்டிருக்கிறது.
டிசோ வாட்ச் ஆர்: அமோலெட் திரையுடன் வரும் கியூட்டான ஸ்மார்ட்வாட்ச்
அதிகமான ஸ்போர்ட்ஸ் டிராக்கிங் மோடுகள்
சுமார் 110-க்கும் ஸ்போர்ட் மோட்களை கொண்டிருக்கும் ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ, உடலில் எரிக்கப்பட்ட கலோரிகள், இதயத் துடிப்பு மாற்றங்கள், உடற்பயிற்சி செய்யும் நேரம் போன்ற விவரங்களை கண்காணிக்கிறது. உடற்பயிற்சி மட்டுமின்றி யோகா, தற்காப்பு கலைகள் போன்றவற்றையும் கண்காணித்து செயலியில் குறித்து வைத்துக்கொள்கிறது.
இத்துடன் 24 மணி நேர இதய துடிப்பு சென்சார், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவைக் (SpO2) கண்டறியும் சென்சார், உறக்கத்தின் தரத்தை அறியும் சென்சார் போன்ற கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதிய மேம்படுத்தப்பட்ட LifeQ ஹெல்த் அல்காரிதம் இந்த ஸ்மார்ட் பேண்டின் பின்பற்றப்படுகிறது. இந்த தொழில்நுட்பமானது, பயனர்களின் உடலில் ஏற்படும் அபாயகரமான மாற்றங்களை முன்கூட்டியே கணித்து கூறிவிடுமாம்.
Noise ColorFit Icon Buzz: காலிங் வசதியுடன் ரூ.2999க்கு நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்!
ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோவை தடையில்லாமல் இயக்க 200mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க மேக்னெட்டிக் சார்ஜிங் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 14 நாள்களுக்கு தாங்கும் பேட்டரி பேக்கப்பை தருகிறது. பவர் சேவிங் மோட் பயன்படுத்தினால் பேட்டரி பேக்கப் 20 நாட்கள் வரை வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ விலை (Redmi Smart Band Pro Price)
ஸ்மார்ட்போண்டுகளில் முக்கியமானதாகப் பார்க்கப்படும் நீர் பாதுகாப்பு அம்சமும் ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோவில் வழங்கப்பட்டுள்ளது. 5ATM தர சான்று வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி இந்த ஸ்மார்ட் பேண்டில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் பேண்டின் மொத்த எடை 14.5 கிராம் மட்டும் தான்.
இந்தியாவில் புதிய ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ விலை ரூ. 3499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது குறுகிய கால சலுகை என்றும் நிறுவனம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. இதன் விற்பனை காதலர் தினமான பிப்ரவரி14 ஆம் தேதி தொடங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மி ஸ்டோர், மி வலைதளம், அமேசான் இந்தியா ஷாப்பிங் தளம் ஆகியவற்றின் மூலம் இந்த ஸ்மார்ட் பேண்டை பயனர்கள் பெற முடியும். குறுகிய காலத்திற்கு பிறகு இந்த ஸ்மார்ட் பேண்டின் விலை ரூ.3,999 ஆக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ விவரக்குறிப்பு
(Redmi Smart Band Pro specs)
பெயர் ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோகட்டமைப்புபாலி கார்பனேட்அளவு42.05 x 24.45 x 11.1 மில்லிமீட்டர்திரை1.47″ அங்குல அமோலெட் தொடுதிரைதெளிவு திறன்194 x 368 பிக்சல்கள்சிப்செட்ஆம்பிக்யூ அப்பல்லோ 3.5 மெமரி8 எம்பி ரேம் / 128 எம்பி உள்ளடக்க மெமரிசென்சார்இதயத் துடிப்பு, ரத்த ஆக்சிஜன் அளவு, அக்செலெராமீட்டர், 6 ஆக்சிஸ் கைரோ, சுற்றுப்புற ஒளிகண்காணிப்பு இருதயத் துடிப்பு, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு, மன அழுத்தம், நடைபயிற்சி, எரிக்கப்பட்ட கலோரிகள், தூக்கம், சுவாசம், விளையாட்டு முறைகள் உள்பட 110க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகள்பாதுகாப்பு50 மீட்டர் ஆழத்தில் வரை நீர் புகாத தன்மைபேட்டரி 200mAh லித்தியம் பாலிமர் (14 நாள்கள் வரை தாங்கக்கூடியது)எடை25.5 கிராம் (டிபியு ஸ்டிராப் உடன்)நிறங்கள்பிளாக்உத்தரவாதம்ஒரு வருடம் (வரையறுகப்பட்டது)விலை ரூ.3,999 (குறுகிய கால சலுகை விலை ரூ.3,499)
Read More:
Redmi Note 11: ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், 50 MP கேமரா, AMOLED திரை… வரிசைகட்டும் சியோமி போன்கள்!Redmi Note 11S: 108 MP கேமரா, AMOLED திரை, Stereo ஸ்பீக்கர்ஸ்… விருந்து படைத்த சியோமி!