அதானி குழுமம் இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் எதிர்காலத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொரு துறையிலும் தனது காலடியினை ஆழமாக பதித்து வருகின்றது. அதோடு ஆய்வு செய்து முதலீடுகளையும் செய்து வருகின்றது.
அந்த வகையில் தற்போது அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் Unyde Systems நிறுவனத்தின் 10% பங்குகளை வாங்கியுள்ளது.
இந்த கையகப்படுத்தலின் மதிப்பு 3.75 கோடி ரூபாய் என கூறப்படுகின்றது.
2வது நாளாக அதானி கொடுத்த வாய்ப்பு.. முதலீட்டாளர்களுக்கு இது பொற்காலம் தான்..!

Unyde Systems
இந்த Unyde Systems என்பது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். இது சாப்ட்வேர் டெவலப்மெண்ட் மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த ஒரு நிறுவனமாகும். கடந்த 202- – 21ல் இதன் டர்ன் ஓவர் 0.86 கோடி ரூபாயாகும். இதன் மூலம் கெளதம் அதானி தலைமையிலான அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 71,818 ஈக்விட்டி பங்குகளை, 10 ரூபாய் முகமதிப்பில் வாங்கியுள்ளார். இந்த பங்கின் விலையானது 522 ரூபாயாகும்.

அதானி வில்மர்
அதானி குழுமத்தினை சேர்ந்த அதானி வில்மர் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தான் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டது. இந்த நிலையில் நேற்றோடு மொத்தத்தில் கடந்த 2 அமர்வுகளில் 40% மேலாக இந்த பங்கின் விலையானது அதிகரித்திருந்தது. இந்த நிலையில் மூன்றாவது நாளான இன்றும் இந்த பங்கின் விலையானது தூள் கிளப்பிய வண்ணமே உள்ளது.

அதானி எண்டர்பிரைசஸ் பங்கு நிலவரம்
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது என்எஸ்இ-யில் இன்று சற்று அதிகரித்து, 1786.10 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்றைய உச்ச விலை 1809 ரூபாயாகவும், இன்றைய குறைந்தபட்ச விலை 1766 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 1908.50 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்தபட்ச விலை 622.10 ரூபாயாகவும் உள்ளது. இதே பிஎஸ்இ-ல் இப்பங்கின் விலையானது சற்று குறைந்து 1779.25 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

என்எஸ்இ நிலவரம்
என்எஸ்இ-யில் அதானி வில்மர் பங்கின் விலையானது இன்று 19.99% அதிகரித்து, 386.25 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்றைய உச்ச விலை 386.25 ரூபாயாகவும், இன்றைய குறைந்தபட்ச விலை 345 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 386.25 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்தபட்ச விலை 227 ரூபாயாகவும் உள்ளது.

பிஎஸ்இ நிலவரம்
பிஎஸ்இ-ல் அதானி வில்மர் பங்கின் விலையானது 19.99% அதிகரித்து, 381.80 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்ச விலை 381.80 ரூபாயாகவும், இன்றைய குறைந்தபட்ச விலை 345.95 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 381.80 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்தபட்ச விலை 221 ரூபாயாகவும் உள்ளது.

வலுவான தேவையே காரணம்
இந்தியாவில் சமையல் எண்ணெய்க்கான தேவையானது வலுவாக உள்ள நிலையில் இதன் விலை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர்.இதற்கிடையில் தான் இந்த பங்கினை வாங்கி வைக்கலாம் என்று பரிந்துரை செய்தும் வருகின்றனர். இந்த நிலையில் இதனை மெய்பிக்கும் விதமாக இந்த பங்கின் விலையானது தொடர்ச்சியாக பட்டியலிடப்பட்ட பிறகு 3வது நாளாகவும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.
Gautam adani’s adani Enterprises acquires 10% stake in USPL
Gautam adani’s adani Enterprises acquires 10% stake in USPL./அதானியின் தொடர் முதலீடு.. அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டு வரும் அதானி எண்டர்பிரைசஸ்..!