அண்ணாத்த படத்தை அடுத்து ரஜினியை இயக்கப் போவது யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருந்தார்கள். இந்நிலையில் தான் அந்த அறிவிப்பு வீடியோ பிப்ரவரி 10ம் தேதி மாலை வெளியானது.
தலைவர் 169
படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். வழக்கம் போன்று அவரின் நண்பர்
அனிருத்
இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த அறிவிப்பை பார்த்து மகிழ்ச்சி அடைந்தவர்களும் உண்டு, ஏமாற்றம் அடைந்தவர்களும் உண்டு. இன்னும் ஒரு படம் தான். அதன் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட ரஜினி முடிவு செய்திருக்கிறார்.
சரி,
தனுஷ்
என்ன ஆசைப்பட்டார், அனிருத்துக்கு என்ன கிடைத்தது என்று கேட்கிறீர்களா?. ரஜினியை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறார் தனுஷ். ஆனால் அனிருத்துக்கோ ரஜினி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு மூன்றாவது முறையாக கிடைத்திருக்கிறது. முன்னதாக பேட்ட, தர்பார் ஆகிய படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்தார்.
ஐஸ்வர்யாவை பிரிந்துவிட்டதால் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு தனுஷுக்கு கிடைப்பது சந்தேகம் தான் என்று பேசப்படுகிறது. ரஜினி தன் மாமா என்பதை தாண்டி தன் தலைவராக பார்க்கிறார் தனுஷ். எனவே, ஐஸ்வர்யாவை பிரிந்தாலும் தலைவர் தலைவர் தான்.
தனுஷ், ஐஸ்வர்யா பிரிய ‘ஸ்…ஸ்’ தான் காரணமா?